உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக LIC நிறுவனத்தின் IPO விற்பனைக்கான தேதி மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
பங்குகளை விற்கும் LIC:
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், விரைவில். LIC-யின் பொதுப்பங்குகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ம் தேதி, LIC IPO-வுக்கான வரைவு அறிக்கை பிப்ரவரி 14-ம் தேதி, பங்குச் சந்தை காப்பீட்டு வாரியமான SEBI-யிடம் தாக்கல் செய்யப்பட்டது. ,
உக்ரைன் ரஷ்யா போர்:
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட சந்தை அதிர்ச்சியை அடுத்து எல்ஐசியின் ஐபிஓவினை தள்ளிப் போடுமாறு வங்கியாளர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எல்ஐசியின் பங்குச் சலுகையை வரும் மாதங்களில் அதிக நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் தொடங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று வங்கியாளர்கள் இந்திய அரசாங்கத்திடம் கூறியுள்ளதாக விஷயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்தார்.
எங்கள் கவலைகளை நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்த வாரத்திற்குள் திருத்தப்பட்ட IPO வெளியாகும் நேரம் குறித்த முடிவு வரலாம் என்று வங்கியாளர் கூறினார்.
நடைமுறையில் உள்ள சந்தை நிலவரங்கள் காரணமாக எல்ஐசியின் ஐபிஓ திட்டங்களை மறுஆய்வு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.