ரஷ்ய நாட்டின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை குறைத்துள்ளதாக சர்வதேச ரேட்டிங் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனில் உள்ள அணுசக்தி நிலையத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருவருவதுடன், ரஷ்யாவில் விற்கப்படும் பொருட்களை நிறுத்துவதாகவும், சேவைகளை நிறுத்தவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
உக்ரேனிய துருப்புக்களின் உக்கிரமான தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பு கோரி டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்து இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்று மாஸ்கோ பலமுறை கூறியுள்ளது.
இருந்தபோதிலும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக, ரஷ்யாவின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை ‘பி’ இலிருந்து ‘சி’க்குக் குறைத்துள்ளதாக சர்வதேச ரேட்டிங் நிறுவனமான ஃபிட்ச் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.