இங்கிலாந்தில் தனது கட்டணத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதை சர்வதேசமயமாக்க, இந்தியாவின் UPI, QR குறியீடு, PayXpert உடன் ஒரு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது.
UPI மற்றும் RuPay கட்டணங்கள் இங்கிலாந்து முழுவதிலும் உள்ள நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 2021 இல், NPCI இன் QR Code-னை ஏற்றுக்கொண்ட முதல் நாடு பூட்டான் ஆகும். அத்துடன் RuPay கார்டுகளை ஏற்றுக்கொண்ட ஒரே நாடு பூட்டான்தான். இந்த ஆண்டு பிப்ரவரியில், UPI, மற்றொரு அண்டை நாடான நேபாளத்தில் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.