2016 ம் ஆண்டு upi சேவை இந்தியாவில் அறிமுகமானது. தற்போது வங்கிகள் பயன்படுத்தும் swift தொழில்நுட்பத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது . கொரோனா சூழலில் டிஜிட்டல் வகை பணம் அனுப்பும் முறை பெரிதும் உதவியது. இந்த சூழலில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 657 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக என் npci தெரிவித்துள்ளது. இத்தனை பரிவத்தனை மூலம் 10.73 டிரல்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் 600 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் , எண்ணிக்கை வருங்காலத்தில் பலமடங்கு உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அண்மையில், இது போன்ற பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை வெளியாகி உள்ளது. இது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் upi மூலம் பணம் செலுத்த பழகி கொண்டனர் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.