தொழிலதிபர் விஜய் மல்லையா மீதாக திவால் நடவடிக்கை வழக்கை இலண்டனில் உள்ள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
’கிங்பிஷர்’ விமான நிறுவனத்திற்கு கடன் கொடுத்த 12 இந்திய வங்கிகள், நிறுவனம் திவாலானவுடன் கொடுத்த கடனை கேட்டு மல்லையாவிற்கு நெருக்கடி கொடுத்தன. அதனால் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.
மல்லையாவிற்குக் கடன் கொடுத்த வங்கிகளும், ஸ்டேட் பாங்க் தலைமையிலான சொத்து மறுசீரமைப்பு நிறுவனமும் தங்களுக்கு 1பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 9,662 கோடி) கடனை வட்டியுடன் சேர்த்து, கட்ட வேண்டும் என்று இலண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
மல்லையாவின் வழக்கறிஞரான ரிச்சர்ட் ஹில், மல்லையா மீதான மூன்று முறையீடுகளையும் ஒன்றாகக் கேட்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார், அதே நேரத்தில் வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய Marcia Shekerdemian, நீதிமன்றம் ஒவ்வொரு முறையீட்டையும் 35 நாட்கள் தாமதத்துடன் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லீச், மூன்று மேல்முறையீடுகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.