மத்திய வரைவு தொலைத்தொடர்பு சட்ட மசோதா டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அதீத கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் உள்ள 3 பிரதான செல்போன் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 3ம் கடன் பெற்று தொலைதொடர்பு சேவைகளை அளித்து வருகின்றன. எனினும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வரும் நிலையில் அதீத கடனில் தள்ளாடும் வோடபோன் ஐடியாவுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய சலுகைகளின்படி கடனில் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மத்திய அரசு கையகப்படுத்தி, அதனை பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியும். மத்திய அரசின் புதிய வரைவு மசோதா நிச்சயமாக வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்கு 1 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. நிறுவனமும் 7 ஆயிரத்து 296 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக அந்நிறுவனம் சொல்லியுள்ளது. அரசு அறிவித்துள்ள புதிய வரைவு சட்டம் நிச்சயமாக வோடபோன் நிறுவனத்துக்கு நல்ல பலனை அளிக்க உள்ளதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.