வோடபோன் ஐடியாவின் சுமார் 20 மில்லியன் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், தரவு மீறலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான CyberX9 தெரிவித்துள்ளது.
இதுகுறித்து CyberX9 வெளியிட்ட அறிக்கையொன்றில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் அழைப்பு நேரம், வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி, SMS உள்ளிட்ட விவரங்கள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலை Vi நிறுவனம் மறுத்துவிட்டது. வாடிக்கையாளர் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளது என்று Vi தெரிவித்தது.