பங்குச்சந்தை உலகில் மூத்த முன்னோடியாக திகழ்பவர் வாரன் பஃப்பட், இவரின் பெர்க்ஷைர்ஹாத்வே நிறுவனம்
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.இவரின் நிறுவனத்தின் பெயரில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஒன்று முளைத்துள்ளது. இதனை கண்டுபிடித்த வாரன் பஃப்பட், அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அறிவித்துள்ளது. பிட்காயினை கடுமையாக எதிர்த்த வாரன் பஃப்பட் நிறுவனத்தின் பெயரிலேயே போலி நிறுவனம் உதயமாகி ஏமாற்றி வருவது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரன் பஃப்பட் நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே தோற்றமளிக்கும் கிரிப்டோ நிறுவனத்தினை நம்ப வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டே வாரன் பஃப்பட் தனது பெர்க்ஷைர்ஹாத்வே நிறுவனத்தை நிறுவினார். அண்மையில் FTX என்ற கிரிப்டோ நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரன் பஃப்பட்டுக்கே விபூதி அடிக்க நினைத்த நிறுவனம் தற்போது சிக்கலை சந்தித்துள்ளது.
அந்த தண்ணி என் தண்ணி இல்லன்னு வடிவேலு ஸ்டைல்ல மறுத்திருக்க வாரன் பஃப்பட்..
Date: