ஒரு காலத்தில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் இருந்து இடம் தெரியாமல் போன கதைகள் ஏராளம், போகிற போக்கை பார்த்தால் வோடஃபோன் நிறுவனத்துக்கும் அந்த நிலைதான் வரும் என்று வருத்தப்படும் சூழலில் அந்நிறுவனம் தவித்து நிற்கிறது. இதை ஏன் இப்போது சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. விஷயம் இருக்கிறது. மாதந்தோறும் எந்த செல்ஃபோன் சிம்கார்டு கம்பெனி எவ்வளவு வாடிக்கையாளர்களை வைத்துள்ளனர் என்ற விவரத்தை மத்திய அரசே வெளியிடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. புதிதாக அந்த நிறுவனத்தில் 14 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். ஜியோவுக்கு அடுத்தபடியாக பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிதாக 8 லட்சத்து 05 ஆயிரம் வாடிக்கையாளர்களை சேர்த்துக்கொண்டுள்ளது. முதலில் கூறிய பாவமான வோடஃபோன் நிறுவனத்தில் இருந்துதான் இத்தனை வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர். செப்டம்பர் மாதம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடஃபோன் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் மேலும் 35லட்சத்து 09 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்து தடுமாறி வருகிறது. தொடர்ந்து 19 மாதங்களாக வாடிக்கையாளர்களை இழந்து வரும் வோடஃபோன் நிறுவனம்,திரிசங்கு நிலையில் தவிக்கிறது. ஒரு பக்கம் அதீத கடன்,மற்றொரு பக்கம் வாடிக்கையாளர்கள் இழப்பு என எல்லா பக்கமும் வோடஃபோனுக்கு சோதனை காலம்தான் மொத்த செல்ஃபோன் சிம்கார்டு சந்தையில் ஜியோவின் சந்தை பங்கு 36.85%ஆகவும்,ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு 31.9%,ஆகவும் உள்ளது. வோடஃபோன் நிறுவனத்தின் பங்கு 21.5%ஆக சரிந்துள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் ஒன்றரை கோடி சந்தாதாரர்களை வோடஃபோன் இழந்துள்ளது. அதேநேரம் 1.7 கோடி சந்தாதாரர்களை புதிதாக ஜியோ நிறுவனம் சேர்த்துக்கொண்டுள்ளது.
என்னடா இது ….வோடஃபோனுக்கு வந்த சோதனை!!!
Date: