நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.
இன்றும் நாளையும் உங்கள் குடும்பங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை நடத்துவதற்கான உத்தரவாதம் அளிக்க நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். குடும்பத்தை உங்கள் வருமானம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்ற சூழலில் நீங்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது, இறப்பு நிலையான உண்மையாக நம்மைச் சுற்றி இருக்கும் சூழலில் உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய நிதிக் கருவிகளில் ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் கண்டிப்பாக உங்களுக்குத் தேவைப்படும்.
லைப் இன்சூரன்ஸ் காப்பீட்டின் மிக எளிமையான அதிக பலனளிக்கும் வடிவமாக டெர்ம் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. பாலிசி காலத்தின்போது காப்பீடு செய்தவரின் துரதிருஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாரிசுக்கோ, பயனாளிக்கோ இழப்பீடு அளிக்கிறது. ஒருவேளை பாலிசிதாரர் பாலிசி காலத்தை மிஞ்சி வாழும் பட்சத்தில், இறப்புக்கான பலன் எதுவும் வழங்கப்படாது. ஆனால், சில சிறந்த டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் நீங்கள் செலுத்திய பிரீமியம் தொகையை திருப்பித் தரும். ஒரு நபர் பிரீமியம் விருப்பத்தைத் திரும்பப் பெரும் பாலிசியைத் தேர்வு செய்து, பாலிசி காலத்திலிருந்து நீண்ட காலம் வாழும் பட்சத்தில், பாலிசி காலம் முழுவதும் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களும் பாலிசிதாரருக்குத் திருப்பிச் செலுத்தப்படும்.
பிரீமியங்கள் குறைவாக இருப்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் ஆபத்தானவை, நம்பகத்தன்மை இல்லாதவை என்று கருதும் வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை உணர வேண்டும். வயதுக்கு ஏற்ப, வாழ்க்கை முறை மாறும் போது நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் மிக அதிகம். நம்முடைய வேலைகளின் தன்மை மற்றும் நம் வாழ்வின் வேகம் காரணமாக நாம் அனைவரும் நோய்களை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏதேனும் நோய் ஏற்பட்ட பிறகு நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்க நினைத்தால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களிடம் மிகவும் தயக்கம் காட்டும் அல்லது உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை வைத்து பிரீமியங்களை அதிகரிக்கும் என்பதால் பாலிசி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் பல்வேறு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களின் நுட்பமான, பணம் சேமிக்கும், கூடுதல் காப்பீட்டுத் தொகை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? இப்போதிருக்கும் உங்கள் பாலிசி குறித்து விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் அன்பானவர்களுக்காக, அவர்களின் எதிர்காலத்தின் நன்மைக்காக புதிய காப்பீடு ஒன்றை எடுக்க வேண்டுமா? உடனடியாக நர்மதா அவர்களை 9150059377 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸப்பில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.