பங்குச்சந்தைகளில் டிசம்பர் மாத துவக்கம் அட்டகாசமாக இருந்தது,ஆனால் அதே நிலை தொடருமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்,ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. இரண்டாவது வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கணிசமாக சரிவை சந்தித்துள்ளது.இதற்கு ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகளே காரணமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை பலரும் விற்றுள்ளதால் பங்குச்சந்தைகளில் நிலையற்ற சூழல் காணப்பட்டது. 18ஆயிரம் புள்ளிகள் என்ற அளவில் தேசிய பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகளின் நிலையால் கடந்த வாரம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் , வரும் வாரங்களில் அமெரிக்க பங்குச்சந்தைகளை ஒட்டியே பங்குச்சந்தைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவுகளை வைத்தே வரும் வாரத்தில் சந்தை நிலவரம் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். வரும் 13-14ம் தேதிகளில் அமெரிக்க சந்தைகளின் முடிவுகளை பொறுத்தே இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கம் இருக்க உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாங்கள் போட்ட முதலீட்டில் 4 ஆயிரத்து 305 கோடி ரூபாய் முதலீடுகளை திரும்ப எடுத்துள்ளனர். வரும்வாரங்களில் அடுத்தடுத்த ஐபிஓகள் இருப்பதன் காரணமாக இந்திய சந்தைகளில் பெரிய அளவில் மாறுதல்கள் இருக்காது என்றே கருதப்படுகிறது.
வரும் வாரம் சந்தை நிலவரம் எப்படி இருக்கும்?
Date: