முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரை அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த துறைகள் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்கின்றன என பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி
வியாபாரம் செய்வோருக்கும், அரசாங்கத்தில் இருப்போருக்கும் வேலையின்மை பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். வேலைவாயப்பின்மை அதிகம் இருந்தால்தான் வேலைகளை தருவோர் பேரம் பேச வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். 2021-2022-ல் விவசாயக்கூலித்தொழிலாளர்கள் வருவாய் வெறும் 3 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2019ம் ஆண்டு நிலவரப்படி ஒரு விவசாயக்கூலித் தொழிலாளியின் குடும்பத்துக்கு சராசரி வருவாய் 10 ஆயிரத்து 213 ரூபாயாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அரசு வேலைவாய்ப்புக்கு ஆட்கள் எடுப்போருக்கும் வேலைவாய்ப்பின்மை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளையில் கூட்டு சேர்ந்திருப்போருக்கு வேலைவாய்ப்பின்மை பிடிக்கும் என்றும் ஏனெனில் வேலை இல்லாதவர்களை எளிதாக சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
யாருக்கெல்லாம் விலைவாசி உயர்வு பிடிக்கும்:
வரி வசூலிப்பவர்களுக்கும், பொருட்களை விற்பவர்களுக்கும் விலைவாசி ஏற்றம் மிகவும் பிடிக்கும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை அட்ஜெஸ்ட் செய்தால் உண்மையில் வசூலித்த்து அவ்வளவு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பட்ஜெட் தயாரிப்பில் குறிப்பிட்ட துறைகளுக்கு இவ்வளவு செய்தோம் என கூறும் பட்ஜெட் தயாரிப்போருக்கு விலைவாசி மிகவும் பிடிக்கும் என்றும் சாடியுள்ளார்.
இதேபோல் அரசியல்கட்சியினருக்கும் விலைவாசி உயர்வு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அதில் ஒரு கட்சி விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் பற்றி பேசினால் ஆளுங்கட்சி அதனை எதிர்க்கும் என்றும், அதே கட்சி எதிர்க்கட்சியானதும் ஆளுங்கட்சியை சாடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்துக்கும் பழகிப்போன நம் அனைவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை விரும்பத் தொடங்கி விடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.,