அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை முதலீடு தற்போது 20 டிரில்லியனாக உயர்ந்துள்ளது
இத்தனை பெரிய அசுர வளர்ச்சி பெற்ற அதானி நிறுவனத்துக்கு பங்குகள் ஹெட்ஜிங் எனப்படும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அதானி, பரஸ்பர நிதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் மொத்த மதிப்பில் 0.76% மட்டுமே அவர் பரஸ்பர நிதியில் பணத்தை வைத்துள்ளார் என்றும் நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதானி நிறுவன பங்குகளின் விலை சந்தையில் மதிப்பிடப்பட்டதைவிடவும் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், இதன் மதிப்பு விரைவில் சரிசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 12 மாதங்களில் 700 மடங்கு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது
இதேபோல்,அதானி என்டர்பிரைசர்ஸ்,அதானி டிரான்ஸமிஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 400 முதல் 450 மடங்கு அதிக வருவாயை ஈட்டியுள்ளது
அதானி குழுமம் பல துறைகளில் அசுர வளர்ச்சி கொண்டிருந்தாலும் அதற்கு நிகராக கடன் பெற்றுள்ளதாகவும் நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்
அதானி குழுமத்தின் கடன் மதிப்பு 2.2 டிரில்லியன் ரூபாயாக உள்ளதாக தெரியவந்துள்ளது
அதானி நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையின் 50 இன்டெக்ஸ் பண்ட்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்றும், அதானி குழும பங்குகள் எந்த நேரத்திலும் சறுக்கலாம் என்றும் நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்
அதானி குழுமத்தில்தான் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் பேசிவ் ஃபண்டில் அதிக தொகையை முதலீடு செய்யலாம் என அறிவுறுத்துகின்றனர்.