சந்தை மூலதன மதிப்பை மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்று அழைப்பார்கள், இது ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு எவ்வளவு என்பதே அடிப்படை புரிதலான எளிமையான விளக்கம், இந்தியாவில் முன்னணியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதனை வலுப்படுத்த போராடி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்து மதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்துமதிப்பு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை விப்ரோ,ஓஎன்ஜிசி,நெஸ்ட்லே நிறுவனங்களைவிட அதிகமாக உள்ளதாக தேவஸ்தானம் முதன் முறையாக அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10.25 டன் தங்கம் பேங்க் டெபாசிட்டாக உள்ளதாகவும், இரண்டரை டன் அளவுக்கு தங்க நகைகளாக உள்ளதாகவும்,வங்கிகளில் டெபாசிட்டாக 16 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாகவும் இந்தியா முழுக்க 960 சொத்துகள் உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் அல்ட்ராடெக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. உணவுத்துறையில் பிரபலமாக உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனமான நெஸ்ட்லேவின் சொத்து மதிப்பு இந்தியாவில் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. திருப்பதி தேவஸ்தானத்தை விடவும் பெரிய சொத்துமதிப்புள்ள நிறுவனங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கண்சல்டன்சி உள்ளிட்ட வெகு சில நிறுவனங்களே இந்தியாவில் உள்ளன. ஓராண்டுக்கு வட்டியாக மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்துக்கு 668 கோடி ரூபாய் வருகிறது, ஆண்டுக்கு சராசரியாக இரண்டரை கோடி பக்தர்கள் காசு பணத்தை திருப்பதி கோயிலில் சென்று கொட்டி வருவதால் ஏழுமலையான் பணமழையில் நனைகிறார்..கோவிந்தா..கோவிந்தா…..
ஏழுமலையான் Vs விப்ரோ,ஓஎன்ஜிசி,நெஸ்ட்லே !!!!
Date: