கொஞ்ச நாள் முன்னாடி Zomato ஒரு IPO வோட வெளிவந்தாங்க. Zomato ஷேர்ஸ் வாங்க போட்டா போட்டி நடந்தது. இப்ப Zomato வோட காலாண்டு நிதி முடிவுகள் வெளியாகியுள்ளன. போன வருஷம் (FY22) சோமட்டோவோட நஷ்டம் 356 கோடி., அதுக்கு முந்தின வருஷம் (FY21) 99.8 கோடியா இருந்துச்சு. செலவினங்கள் அதிகரித்ததோடு மட்டுமில்லாமல், வெளி உணவுகளை வாங்க மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்பதாலும், இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக Zomato தெரிவித்துள்ளது.
Q1 இல் செயல்பாடுகளின் வருவாய் ரூ. 844.40 கோடியாக உயர்ந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 266 கோடியாக இருந்தது. சோமாடோவின் முக்கிய உணவு விநியோக வணிகம், ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய கடுமையான கோவிட்டின் இரண்டாவது அலை இருந்த போதிலும் தொடர்ந்து வளர்ந்து வந்தது.
Zomato க்கு மொத்தம் இதுவரைக்கும் 1 பில்லியன் ஆர்டர்களுக்கு மேல வந்திருக்கு. “இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு ஆறு ஆண்டுகள் ஆனது. அடுத்த பில்லியனை அடைய எங்களுக்கு மிகக் குறைவான காலமே தேவைப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பில்லியன் ஆர்டர்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமானவை கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே வந்தன என்பது அடுத்த பில்லியனை நாங்கள் விரைவில் அடைவது குறித்து எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது” என்று நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். Zomato அதன் டெலிவரி தோழர்களின் தற்போதைய வேலை நிலையை மேம்படுத்தவும் பார்க்கிறது.
Q1 இல் இழப்பு ஏற்பட்டதால் Zomato பங்குகளில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை. எனவே, இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் பங்குகளை வைத்திருக்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா? ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, நிறுவனத்தை கண்காணிக்கும் ஆறு ஆய்வாளர்களில், நான்கு பேர் ‘வாங்கலாம்’ என்று பரிந்துரைக்கின்றனர், இருவர் ‘விற்கலாம்’ என்று பரிந்துரைக்கின்றனர்.
இதில் இருந்து பெரும்பாலோர் Zomato ஷேர்ஸ் வைத்து இருப்பதை இப்பொழுது பரிந்துரை செய்கின்றனர்.