HDFC வங்கியின் துணைத்தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெக்கி. எம். மிஸ்திரி தெரிவிக்கும்போது, ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனம் 13 சதவீதம் நிகர வருமானம் ரூ. 31,308 கோடியில் ரூ. 5,837 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருவாயின் முக்கிய லாப அளவீடு ரூ.4,005 கோடியிலிருந்து ரூ.4,284 கோடியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
வரி வசூல், மின் நுகர்வு, வாகனப் பதிவுகள், நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் மற்றும் இ-வே பில்கள் போன்ற பொருளாதார குறிகாட்டிகளின் முன்னேற்றம் பரந்த அளவில் உள்ளது. இது Q3 FY22 இன் போது பணப்பட்டுவாடா மற்றும் வசூல்களின் மீட்சிக்கு வழிவகுத்தது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020-ம் நிதியாண்டில், பழைய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி , ஆயுள் காப்பீட்டில் பங்குகளை வாங்கியது. இணைப்புக்கு முன் OBC ஆனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஒன்றிணைந்ததன் மூலம் PNB-க்கு கிடைத்துள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.
இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் M&M குழுமமானது தலைமை வகிக்கிறது. இது உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும்.