"4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில், மூலதன செலவினத்தை 35.4% அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% உயர்த்துவதற்கு மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.