சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகளுக்காகவும், 2 இடங்களில் களஆய்வுகளை செய்யவும், கொற்கை முன்களப் பணிகள் ஆகியவற்’றுக்கா 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.