தொழில்துறை

பாரத் பெட்ரோலியம் பங்குகளை வாங்க $10 பில்லியன் நிதி திரட்டும் வேதாந்தா நிறுவனம் !

சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.

பங்குச் சந்தையில் 3 நாட்களில் முதலீட்டாளர்களின் பணமிழப்பு ரூ. 6,80,441 கோடி !

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் கடந்த 3 நாட்களில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக பங்குதாரர்களின் பணமிழப்பு ரூ. 6,80,441 கோடியாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அதன் இழப்புகளை தொடர்ந்து, வியாழன் அன்று மீண்டும் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 60,000-நிலைக்கு கீழே முடிந்தது.

1.59 டிரில்லியன் வரி திருப்பி செலுத்தப்பட்டது – வருமான வரித்துறை

ஏப்ரல் 1, 2021 முதல் 2022 ஜனவரி 17 வரை 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ₹1.59 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வியாழக்கிழமை ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாஃப்ட் மீது உலக வங்கித் தலைவர் விமர்சனம் !

மைக்ரோசாப்ட் கேமிங் டெவலப்பர், ஆக்டிவிஷன் ப்ளிஸார்டை 69 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தியதை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் புதன்கிழமை விமர்சித்தார். ஏழை நாடுகள் கடன்களை மறுசீரமைக்கவும், COVID-19 மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் இது தேவையா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Popular

Subscribe

spot_imgspot_img