ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், கோவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழிப்புகளை சந்தித்திருக்கிறது, சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள் அன்பானவர்களை இழக்கிறார்கள்.
புதன் கிழமை தேசிய பங்குச் சந்தை வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்கு வணிகத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சந்தை அளவிலான நிலை வரம்பில் (MWPL), வோடபோன்...
ஐடி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது 2019 ஐ விட கிட்டத்தட்ட 21 மில்லியன் அதிகமாகும் என்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2022 இல் பணிபுரிந்த மொத்த மணிநேரம் அவர்களின் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கிட்டத்தட்ட 2% அல்லது 52 மில்லியன் முழுநேர சமமான வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது