ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் சவூதியின் அரம்கோ ஆகிய நிறுவனங்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையை நிறுத்திய சில மாதங்களில், அதானி குழுமம், அராம்கோவின் பங்குகளை அரசின் பொது முதலீட்டு நிதியத்தில் இருந்து வாங்கும் யோசனையைப் பற்றி விவாதித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் 13.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளான 12.5 லட்சம் கோடியை விட 9% அதிகமாகும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறைக்கான கனிம உற்பத்தி குறியீடு நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் 124.7-ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.8% அதிகம். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில், ஒட்டுமொத்தமான கனிமங்களின் உற்பத்தி 14.2% அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஃப்யூச்சரின் இயக்குநர்கள் குழு, இரண்டு கூட்டங்களை நடத்தியதாகவும், "கடுமையான மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை" நேர்மறையான சூழ்நிலையை சிக்கலாக்கியுள்ளது என்று ரிலையன்ஸுக்கு அறிவித்ததாகவும் கூறியது..