Power Finance Corporation –ன் CMD ரவீந்தர் சிங் தில்லான், மற்றும் மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் இடைக்கால ஈவுத்தொகை, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னாவில் NMDC தனது வைரச் சுரங்கத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த வைர வளத்தில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகும். மஜ்கவான் பன்னாவில் உள்ள என்எம்டிசியின் வைரச் சுரங்கத் திட்டம் நாட்டிலேயே இயந்திரமயமாக்கப்பட்ட வைரச் சுரங்கமாகும்.