பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.
முகேஷ் அம்பானி தனது $217 பில்லியன் சாம்ராஜ்யத்தை அடுத்த தலைமுறைக்கு எப்படி மாற்றுவார் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. ஆனால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அவரது கார்ப்பரேட் வாரிசு குறைந்த பட்சம் மூன்று சூப்பர் ஸ்டார் வணிகங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருக்கும், ஒவ்வொன்றும் அதன் குறிப்பிட்ட துறையில் லாபத்தில் மிகப் பெரிய பங்கை இலக்காகக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,505.95 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 491.40 புள்ளிகள் குறைந்து 59,731.75 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50...
செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றம் ஃபியூச்சர் குழுமத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது – ரிலையன்ஸ் உடனான அமேசானின் ஆட்சேபனைகளைத் தீர்ப்பது குறித்து நடுவர் மன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதன் விண்ணப்பத்தை முடிவு செய்ய அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்திற்கு (SIAC) விண்ணப்பித்தது. தகவலறிந்த வட்டாரங்கள், அமேசானின் வழக்கு, ஒப்பந்தக் கடமைகள் தவறியதற்குப் பரிகாரம் தேடுவது உண்மையானது என்றும் பணப் பற்றாக்குறையில் உள்ள ஃபியூச்சர் குழுமம் உயர் மன்றத்தை அணுகி தீர்வு காண வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தன.