இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 60,008.88 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 66.05 புள்ளிகள் அதிகரித்து 59,921.98 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 14.84 புள்ளிகள் அதிகரித்து 17,820.10 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 103.40 புள்ளிகள் அதிகரித்து 36,943.55 ஆக வர்த்தகமானது.
மாருதி சுஸுகி, 2021 காலண்டர் ஆண்டில் நிறுவனத்தின் 10 சிறந்த மாடல்களில் எட்டு மாடல்களுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சாலைகளைத் தொடர்ந்து ஆட்சி செய்கிறது. 2020 ஆம் ஆண்டில் உள்ளூர் சந்தையில் மிகவும் பிரபலமான முதல் 10 வாகனங்களில் ஏழு மாருதி சுஸுகி குடும்பத்தைச் சேர்ந்தது. 2013 ஆம் ஆண்டில் பெஸ்ட் செல்லர் பட்டியலில் நிறுவனத்தின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது. மாருதி சுஸுகிக்கு விருப்பமான வாடிக்கையாளர்கள் இருக்கும் இந்தியாவில் வேகன்ஆர் 2021 ஆம் ஆண்டில் 1,83,851 யூனிட்களை விற்பனை செய்து அதிக விற்பனையான மாடலாக உருவெடுத்தது.
நிதி சார்ந்த விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க ஐந்து எளிய வழிகள் !
உங்கள் நிலைமையைக் கவனியுங்கள்:
நிதி அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஒரு வழி, உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, ஒவ்வொரு மாதமும்...
ONGCயின் முதல் பெண் இயக்குநராக அல்கா மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிட்டலுக்கு, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (CMD) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தெரிவித்தார்